குலவிளக்கே – பார்மீட்க
குவலயத்தில் பிறந்தவா
கவிநாதா – நான் போற்றும்
புவி வேந்தா – உன்னழகை
கவியாலே பாடுகிறேன் கேளையா.
இயற்கைக்கே அழகளிக்கும்
உன்னழகு தன்முன்னே
அடிவான அழகழகோ?
ஆழ்கடலின் அழகழகோ?
வான் மீதில் மதியழகோ?
நான்பாட எது தகுமோ?
உன்முன்னே வைத்து நோக்க
எல்லாமே புழுதி போல – உன்
கண்முன்னே சிவப்புநிற
இரத்தினமும் தோற்றுவிடும்.
கூவும் குயில் கூட
உன் குரலால் நாணுதையா
மாதரிலும் மாந்தரிலும்
உன்னழகே பேரழகு.
ஆடும் மயில் தோகையென்ன
உன் சிரசின் முடிக்கு முன்னே
ஓடும் மான் புள்ளியென்ன
உன்னழகு விழிக்கு முன்னே
வான் மீதில் வெள்ளியெல்லாம்
ஒன்றாக சேர்த்துப் பார்த்தேன்
உன் முகத்தின் அழகுக்கு
சிறிதேனும் பொருத்தமில்லை
மாந்தருக்கு இல்லாத சாந்தம்
வேஷம் இல்லாத பாசம்
கலப்பு இல்லாத சிரிப்பு
ஜயா உன் முகத்தில் உண்டே
செக்கனுக்குள் கண்ணெதிரே
பட்டுவிட்டுச் சென்றுவிட்டாய்
கண்டுவிட்ட உன்னழகை
வெளிப்படுத்த கவிவடித்தேன்.
ஒப்பிட்டு சொல்வதற்கு
எதுவுமில்லை இவ்வுலகில்
உலகமே உன் முன்னால் தோற்றுவிட
கவிபாடி தோல்வி கண்டேன் நானுங்கூட..
--------------------------- By Robert Dinesh --------
Super. God bless you dear....
ReplyDeleteSuper.. God bless you dear... Let his beautiful name be glorified always
ReplyDelete