Friday, 22 March 2013

என்னை பாவியாக்கும் அழகு


நான் என் தேவனுடன் 09













தேவனே…!

காலையில்
அடிவானத்தில்
நீர் காட்டும்
வர்ண ஜாலத்தின் அழகு..
நான் உம்மை
பாடும்படி செய்கிறது.

மாலையில்
சூரிய அஸ்தமன அழகு..
உமது செயல்களை எண்ணி
வியக்க வைக்கிறது.
                 
வான் மத்தியில் வட்டமிடும்
பறவைகளின் அழகு,
மலையுச்சியில் முட்டிவரும்
மேகங்களின் அழகு,
இவையெல்லாம்..
நான் உம்மை
துதிக்கும்படி செய்கிறது.
                          
இதற்கிடையில்..
இடையசைத்து
நடைபோடும்
ஒரு பெண்ணின் அழகு
என் ரசனைகளை
திசை திருப்பி விடுகிறது.

மொத்தத்தில் தேவனே…
                        
நீர்
இயற்கைக்கு
கொடுத்திருக்கும் அழகு
உம்மை நான்
துதிக்க செய்கிறது.
          
நீர்
பெண்ணுக்கு கொடுத்திருக்கும்
அழகோ
என்னை பாவியாக்கிறது. 

--------------------------- By  Robert Dinesh --------

1 comment:

  1. தூய ஆவியானவரே என் கண்களுக்கு கலிக்கமிட்டு பார்வையை பரிசுத்தமாய் வடிகட்டி மூளைக்குள் அனுப்புமைய்யா

    ReplyDelete

உங்க கருத்துகளை எழுதுங்க please