நான் என் தேவனுடன் 03
தேவனே……!
எவ்வளவு பரந்த வானத்தை
என்னால் பார்க்க முடிகிறதோ
அவ்வளவு பரப்பிலும்
நட்சத்திரங்களையும்
பார்க்க முடிகிறது.
அது போலவே
எவ்வளவு தூரம்
என் வாழ்க்கை போகிறதோ
உம் அன்பையும்
நன்மைகளையும் காண
என்னால் முடிகிறது.
மழை மேகம்
நட்சத்திரங்களை
மூடுவது போல
என் பெருமையும்,
என் சுய கௌரவமும்
நீர் செய்த நன்மைகளை
நினைக்க முடியாமல்
மறைத்து விடுகின்றன.
பாவியாக பிறந்து விட்டேன்
மன்னிக்க வேண்டுகிறேன்.
--------------------------- By Robert Dinesh --------
--------------------------- By Robert Dinesh --------
No comments:
Post a Comment
உங்க கருத்துகளை எழுதுங்க please