நான் என் தேவனுடன் 04
தேவனே….!
ஆற்றங்கரையில்
வீற்றிருக்கும்
மரத்தின்
இலைகளை
காற்று,
சற்றே
விலக்கியபோது..
இலைகளிடையே
மறைந்திருந்த
வான்
நிலா,
என்
கண்களில்
பட்டது.
அம்
மரத்தின் இலையாய்
என்
பாவம்,
நான்
உம்மை
காணக்
கூடாதபடி
மறைந்திருந்தது.
ஒரு
நாள்
உம்
இரத்தம்…
காற்றாய்
என்
பாவத்தை விலக்க,
உம்மை
என்னால்
காண
முடிந்தது.
இன்றும்
உம்மை
அனுபவிக்க
முடிகிறது…!
--------------------------- By Robert Dinesh --------
--------------------------- By Robert Dinesh --------
அவ்விலைகள் உம்மை இனி ஒருக்காலும் மறைக்காதிருக்க உதவிடும் தேவனே.
ReplyDeletepraise god
ReplyDelete