நான் என் தேவனுடன் 08
தேவனே ……!
எனது
மேஜையிலுள்ள
சிறிய மணிக்கூட்டில்
நேரத்தை
பார்த்தால்,
அந்த
மணிக் கூடு
நீர் பேசுவதற்கு
உதாரணம்
காண்பிக்கிறது.
அதில்
சுழன்று வரும்
முட்கள்
மூன்றும்
மணிக்கொரு தடவை சேர்கிறது.
மறு
நிமிடம்
பிரிந்து விடுகிறது.
அது
போலவே
தேறி
வரும் உலகில்
மாறிவரும் உறவுகள்
ஒன்றையொன்று
சந்தித்து, சேர்ந்து
பலகாலம்
நிலைக்கவில்லை
மறுகணம் பிரிந்து விடுகிறது.
பணமும்,
பொருளும்,
அந்தஸ்த்தும் இதற்கு
காரணங்களாகி
விடுகின்றன.
ஆனால்
இந்த
மூன்று முட்களும்
பொருத்தப் பட்டிருப்பது
சுழலுகின்ற
ஒரேயொரு முள்ளில்தான்
என்பதை
அவைகள்
நினைக்கவில்லை
--------------------------- By Robert Dinesh --------
No comments:
Post a Comment
உங்க கருத்துகளை எழுதுங்க please