நான் என் தேவனுடன் 06
தேவனே….!
ஒருவன்
பெயரோடும்
புகழோடும் வாழ்ந்தாலும்,
அவன்
இறந்து விட்டால்….
பிணமென்று
அவனை
எல்லோரும்
ஓரங்கட்டி
விடுகிறார்கள்.
அவன்
சேர்த்ததெல்லாம்
பிறனுடையதாகின்றது.
வெறுமையாய் போகிறான்.
எங்கோ
போகிறான்.
வீட்டு முகவரியிலும்
அவன்
பெயர்
இன்றிப் போகிறது.
இப்போது
புரிகிறது…
பொன்,
பொருள், புகழெல்லாம்
சாவோடு போய்விடும்,
உம்மோடு
வாழா விட்டால்
என் ஒரேயொரு வாழ்வும்
வீணாகிப் போய்விடும்.
--------------------------- By Robert Dinesh --------
No comments:
Post a Comment
உங்க கருத்துகளை எழுதுங்க please