Showing posts with label எனது கவிதுளிகள். Show all posts
Showing posts with label எனது கவிதுளிகள். Show all posts

Saturday, 13 January 2018

ஆணிவேர்

தேவனே!

என் வாழ்வில் நான் கண்ட ஒரு விடயம் எனக்கு வியப்பாயிருந்தது

பலமான இரும்பு ஆணி கூட துழைக்க முடியாத கற்பாறையை மென்மையான ஆணிவேர் துழைத்துவிடுகிறது.

அதுபோலவே

எவ்வளவோ கண்டிதங்களும், தண்டணைகளும், கடின முயற்சிகளும் திருத்த முடியாத என் வாழ்வை

உமது மென்மையான வார்த்தைகள் திருத்தி காட்டி  விட்டது.

என்னே உம் வார்த்தையின் வல்லமை!

Saturday, 23 March 2013

நிலா சொன்ன கதை




நீலக் கடல் வான் மேலே
நிலாவது ஓடம் போலே
மிதக்கின்ற வேளையிலே…

கா !
வ்வின்பக் காட்சி கண்டு
அகமலர்ந்து ரசிக்கையிலே
ங்கிருந்தோ வந்ததே
கோரக் கரு முகில்.

ழகான நிலாவதனை
கருமுகில் மறைத்து விட
தனுள்ளே மறைந்த நிலா
போகும் திசை தெரியாமல்
தட்டுத் தடுமாறியது.

லர்ந்திருந்த என்னகம்
வாடிவிடலானது….

ன்னுள்ளே இயற்கையை நான்
திட்டியதாலோ அறியேன்,
விரைந்து வந்த குளிர் காற்று
கருமுகிலை விரட்டி விட்டு
நிலவுக்கு வழியமைத்தது.

றுபடியும் அழகு நிலா
வான்மீதில் நயங்காட்ட
றக்கின்றேன் என் வாழ்வின்
நிகழ் காலந்தனை

ன்வாழ்வும் நிலாவாழ்வும்
ஒப்பும் என நினைக்கின்றேன்.

நீல வானாம் பூமி மேலே
நானங்கு நிலாப் போலே
வாழுகின்ற காலத்திலே…  

கா…!
ன்பமான வாழ்வதனை - பாவக்
கருமுகில் மறைத்துவிட

றைந்து விட்ட நிலாப் போலே
பாவத்துள் மறைந்து,
மெய்தேவன் யாரென்ற
அறியாமல் திணறிப் போனேன்…

ன்பமான என் வாழ்வு
துன்பமாக மாறியது…

குருடனாக வாழும் போது
குளிர் காற்றாம் யேசு இரத்தம்
பாவக் கரு முகிலை
விரட்டி வழி காட்டியது.

முன்னை விட இங்ஙனமே
என் வாழ்வு மெய்யாக
மாறியதை அறிகின்றேன்.
பூமியிலே…
யரொளியாய் ஒளிர்க்கின்றேன்.

ன்வாழ்வும் நிலாவாழ்வம்
இத்தால் ஒப்புதன்றோ
னக்கிதை கற்பிக்க
நிலாப்படைத்த தேவனுக்கு
ன்ன செய்ய கைமாறு…?

அழகு தெய்வம்


                  











குலவிளக்கே – பார்மீட்க
குவலயத்தில் பிறந்தவா

கவிநாதா – நான் போற்றும்
புவி வேந்தா – உன்னழகை 
கவியாலே பாடுகிறேன் கேளையா.

இயற்கைக்கே அழகளிக்கும்
உன்னழகு தன்முன்னே

அடிவான அழகழகோ?
ஆழ்கடலின் அழகழகோ?
வான் மீதில் மதியழகோ?
நான்பாட எது தகுமோ?

உன்முன்னே வைத்து நோக்க
எல்லாமே புழுதி போல – உன்
கண்முன்னே சிவப்புநிற
இரத்தினமும் தோற்றுவிடும்.

கூவும் குயில் கூட
உன் குரலால் நாணுதையா  
மாதரிலும் மாந்தரிலும்
உன்னழகே பேரழகு.

ஆடும் மயில் தோகையென்ன
உன் சிரசின் முடிக்கு முன்னே
ஓடும் மான் புள்ளியென்ன
உன்னழகு விழிக்கு முன்னே

வான் மீதில் வெள்ளியெல்லாம்
ஒன்றாக சேர்த்துப் பார்த்தேன்
உன் முகத்தின் அழகுக்கு
சிறிதேனும் பொருத்தமில்லை

மாந்தருக்கு இல்லாத சாந்தம்
வேஷம் இல்லாத பாசம்
கலப்பு இல்லாத சிரிப்பு
ஜயா உன் முகத்தில் உண்டே

செக்கனுக்குள் கண்ணெதிரே
பட்டுவிட்டுச் சென்றுவிட்டாய்
கண்டுவிட்ட உன்னழகை
வெளிப்படுத்த கவிவடித்தேன்.
ஒப்பிட்டு சொல்வதற்கு
எதுவுமில்லை இவ்வுலகில்

உலகமே உன் முன்னால் தோற்றுவிட
கவிபாடி தோல்வி கண்டேன் நானுங்கூட.. 

--------------------------- By  Robert Dinesh --------

Friday, 22 March 2013

என்னை பாவியாக்கும் அழகு


நான் என் தேவனுடன் 09













தேவனே…!

காலையில்
அடிவானத்தில்
நீர் காட்டும்
வர்ண ஜாலத்தின் அழகு..
நான் உம்மை
பாடும்படி செய்கிறது.

மாலையில்
சூரிய அஸ்தமன அழகு..
உமது செயல்களை எண்ணி
வியக்க வைக்கிறது.
                 
வான் மத்தியில் வட்டமிடும்
பறவைகளின் அழகு,
மலையுச்சியில் முட்டிவரும்
மேகங்களின் அழகு,
இவையெல்லாம்..
நான் உம்மை
துதிக்கும்படி செய்கிறது.
                          
இதற்கிடையில்..
இடையசைத்து
நடைபோடும்
ஒரு பெண்ணின் அழகு
என் ரசனைகளை
திசை திருப்பி விடுகிறது.

மொத்தத்தில் தேவனே…
                        
நீர்
இயற்கைக்கு
கொடுத்திருக்கும் அழகு
உம்மை நான்
துதிக்க செய்கிறது.
          
நீர்
பெண்ணுக்கு கொடுத்திருக்கும்
அழகோ
என்னை பாவியாக்கிறது. 

--------------------------- By  Robert Dinesh --------

லாபம் என்ன?


நான் என் தேவனுடன் 07








தேவனே..!

வானத்து நட்சத்திரங்கள்
சூரியன் வந்தவுடன்
ஒடுங்கி
தெரியாமலே போவது போல…

நான் இந்த உலகிற்கு - என்னை
பெரியவனாக
காட்டிக் கொண்டாலும்,

நீர் வரும் போது,
உமக்கு முன்பாக
ன்றுமில்லாதவன்
போலாகி விடுகிறேன்.

ன்னுடைய
நீதி நியாயமெல்லாம்
மக்கு முன்பாக
கிழிந்த கந்தை துணியைப்
போல இருக்கிறது.

நான் கற்று தேறினவனானாலும்,
நீர் தந்த ஞனத்தை
நீர் எடுத்துவிட்டால்…
ற்றதனால் எனக்கென்ன லாபம்?

னவே தேவனே..!
நீர் என்னில்
வாழ்ந்தாலன்றி
ந்த வாழ்க்கையை நான்
வாழ விரும்பவில்லை. 

--------------------------- By  Robert Dinesh --------

எங்கோ போகிறான்...

நான் என் தேவனுடன் 06











தேவனே….!

ருவன் பெயரோடும்
புகழோடும் வாழ்ந்தாலும்,
வன் இறந்து விட்டால்….

பிணமென்று அவனை
எல்லோரும்
ரங்கட்டி விடுகிறார்கள்.

வன் சேர்த்ததெல்லாம்
பிறனுடையதாகின்றது.
வெறுமையாய் வந்தபடி

எதிர் பார்க்கும் பாசங்கள்

நான் என் தேவனுடன் 05







தேவனே…!

ன் தாய் என்னில்
பாசம் வைத்தாள்
வள் முதிர் வயதில்
பாசம் வைத்து
ராமரிப்பேனென்று,
              
ன் தந்தை என்னில்
பாசம் வைத்தார்
வர் கடமைகளை

Tuesday, 19 March 2013

மரத்தின் இலையாய் என் பாவம்,

நான் என் தேவனுடன் 04 












தேவனே….!

ஆற்றங்கரையில் வீற்றிருக்கும்
மரத்தின் இலைகளை
காற்று,
சற்றே விலக்கியபோது..

இலைகளிடையே மறைந்திருந்த
வான் நிலா,
என்
கண்களில் பட்டது.

அதே போல்தான்…

மன்னிக்க வேண்டுகிறேன்.


நான் என் தேவனுடன் 03










தேவனே……!
       
எவ்வளவு பரந்த வானத்தை
என்னால் பார்க்க முடிகிறதோ
அவ்வளவு பரப்பிலும்
நட்சத்திரங்களையும்
பார்க்க முடிகிறது.
         
அது போலவே
எவ்வளவு தூரம்
என் வாழ்க்கை போகிறதோ
அவ்வளவு தூரம்

ஆழ்கடல் போன்றது

நான் என் தேவனுடன் 02






தேவனே

ஆழ்கடல் போன்றது
உம் வேதம்.

அதில் அமிழ்ந்துள்ள
சிப்பி போன்றது
உம் வசனம்.

சிப்பிக்குள் மறைந்துள்ள
முத்து போன்றது

தனிமையில் நடக்கையில்

நான் என் தேவனுடன் 01








தேவனே...!

கூட்டத்தோடு கூட்டமாய்
நடப்பதை விடவும்
தனிமையில் நடக்கையில் தான் - நீர்
உடனிருப்பதை உணருகிறேன்.

னவேதான் தேவனே...!
நண்பர்கள் உறவெல்லாம்