நான் என் தேவனுடன் 07
தேவனே..!
வானத்து நட்சத்திரங்கள்
சூரியன் வந்தவுடன்
ஒடுங்கி
தெரியாமலே போவது போல…
நான் இந்த உலகிற்கு - என்னை
பெரியவனாக
காட்டிக் கொண்டாலும்,
நீர் வரும் போது,
நீர் வரும் போது,
உமக்கு முன்பாக
ஒன்றுமில்லாதவன்
போலாகி விடுகிறேன்.
என்னுடைய
நீதி நியாயமெல்லாம்
உமக்கு முன்பாக
கிழிந்த கந்தை துணியைப்
போல இருக்கிறது.
நான் கற்று தேறினவனானாலும்,
நீர் தந்த ஞனத்தை
நீர் எடுத்துவிட்டால்…
நீர் எடுத்துவிட்டால்…
கற்றதனால் எனக்கென்ன லாபம்?
எனவே தேவனே..!
நீர் என்னில்
வாழ்ந்தாலன்றி
இந்த வாழ்க்கையை நான்
வாழ விரும்பவில்லை.
--------------------------- By Robert Dinesh --------
--------------------------- By Robert Dinesh --------
suuuuuuperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr ma
ReplyDeleteVery good. use your talents for Jesus.
ReplyDeletevery good. use your talents for Jesus
ReplyDeletethank you brothers
ReplyDelete