சரீரம் என்பது வெகுமதியா? பெரும் தொல்லையா?
மண்ணினால் படைக்கப்பட்ட மாமிசமன்று எனக்குண்டு
எண்ணில்லா கிரியைகளை செய்யும்திறன் அதற்குண்டு
தேவனின் சுவாசத்தால் ஜீவன்தனை பெற்றுக்கொண்டு
பாசபந்த பிணைப்புக்குள்ளே பரிதபித்து கிடக்கிறது.
கண்ணிரண்டு காலிரண்டு கையிரண்டு அதற்குண்டு
விண்வரையில் சென்றுவரும் வல்லமையும் அதற்குண்டு
காசுபணம் சேர்ப்பதற்கு காலமெல்லாம் உழைக்கிறது
நாச மோசம் செய்வதற்கும் துணிந்துதான் நிற்கிறது.
இருபத்தைந்து வயதுவரை இளம்பிறைபோல் வளர்ந்து வரும்
அறுபத்தைந்து வயதினிலே தள்ளாடி தவித்துவிடும்
குழந்தையான நாட்களிலே குதுகுலமாய் திரிந்த அது
இழந்துபோன உலகத்தினுள் இன்பம் தேடி அலைகிறது
காலையில் எழுந்தவுடன் கடன்களை முடிக்க சொல்லும்
வாழுகின்ற நாளெல்லாம் வயிறு நிறைய உண்ண சொல்லும்
ஓடி ஓடி உழைத்துவிட்டால் ஒய்வுதேடி தவிக்கிறது
வாட்டிவிடும் நோய் வந்தால் சுருண்டுதான் படுக்கிறது!
இச்சையினால் இழுக்கப்பட்டு இன்பம் பெற துடிக்கிறது
இறைவனின் வார்த்தைக்கு எதிர்த்து நின்றே கெடுக்கிறது
கடவுள் எனக்கு கொடுத்த இந்த "காயம்' என்னும் சரீரமது
வெகுமதியா பெருந்தொல்லையா புரியவில்லை இன்றுவரை!
கிறிஸ்துவின் அடிமை
from facebook

No comments:
Post a Comment
உங்க கருத்துகளை எழுதுங்க please