Tuesday, 19 March 2013

ஆழ்கடல் போன்றது

நான் என் தேவனுடன் 02






தேவனே

ஆழ்கடல் போன்றது
உம் வேதம்.

அதில் அமிழ்ந்துள்ள
சிப்பி போன்றது
உம் வசனம்.

சிப்பிக்குள் மறைந்துள்ள
முத்து போன்றது
அதன் சத்தியம்.

தேவனே….!

வேதத்தின் ஆழத்துக்குள்
போக விரும்புகிறேன்.
வேதத்தில் சுழியோடி
முத்துடன் கரையேற
மதருள் வேண்டினேன். 

--------------------------- By  Robert Dinesh --------

No comments:

Post a Comment

உங்க கருத்துகளை எழுதுங்க please